சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம் 08

தமிழ் மொழியே
தமிழ் மொழியே  தாய் மொழியே.
பெற்றவர் தந்த மொழியே
பிறப்பால் வந்த மொழியே
மொழிகளுள் சிறந்த மொழியே
மூத்தோரெல்லாம் போற்றும் மொழியே

கற்றால் கடலிலும் ஆழம் நீ
பெற்றால் பேரறிவாளர் நாம். தொன்மையான மொழியும்.
கொடுங்கோல் வார்த்தையும், 
சுட்டெரிக்கும் பேச்சுக்களும்.
இனிமையான பாடல்களும், 
இன்பமான உரையாடல்களும், 
சோகமான ஆக்கங்களும், 
சொல்லி மாளா அழகிய மொழியிது.

தாய்மொழி கற்றவரெல்லாம்  பாக்கியசாலி தானேயாம்.
மற்றவரெல்லாம் தீயசக்தியின்
சாபக்கேடு பெற்றவராம்.
தாய் மொழியைக் கற்று நாம்
தாய் மண்ணைக் காத்தும் கூட
தரணி போற்ற வாழ்ந்திடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்