சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-22

21-11-2023

பிறந்த மனை

பிறந்த மனை நிறைந்த வளம்
பச்சை காய்கறியும்
பசு தரும் சுடு பாலும்
மிச்சத்திற்கு கனிவகையும்
சொல்லவொணா சோலையும்,

முப்பத்திரண்டு பரப்புக் காணியில்
அழகான சிறிய வீடும்
மிஞ்சிய பாசம் கொண்ட
நெஞ்சம் நிறைந்த உடன்பிறப்பும்.

வாஞ்சையோடு வாழ்ந்த பெற்றோரின்
தியாகத்திற்கு ஈடேதுமில்லை
அஞ்சாமல் வாழும் என் அகிலமிது
நெஞ்சிலும் நிறைந்து நிற்கிறது

எட்டி நடக்க பேரன், பேர்த்தி வீடும்
பின் வேலியில் தாய் மாமன் வீடும்
கொஞ்சம் போக பெரியம்மா வீடும்
ஊர் முழுக்க உறவாய் வாழ்ந்தோம்
மீண்டும் வாழக் கேக்கும் மனையிது.

நாடு கொண்ட யுத்தத்தில்
நாமும் தொலைத்தோம்
மொத்தத்தை.
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
நெஞ்சுக்குள் சில நெருடல்கள்
வலிக்கிறது

நாம் தொலைத்த அழகிய
உறவுகளைப்
போல்
இன்று கிடைத்த உறவுகளுடன்
ஒன்றாய்ச் சேர்ந்து
வாழ்ந்திடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.