சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-17

05-09-2023

விடுமுறைக் களிப்பு

விடுமுறைக் களிப்பென திகைக்க
மனங்களும் களிப்பில் வியக்க
பணம்களும் கையில் கரைய
வித வித களிப்பில் மிதக்க.

சொந்த மண்ணில் கால் பதிக்க
சொக்கி போய் நான் நிற்க
நின்றோரெல்லாம் மலைக்க
நெரிடும் பாசம் கைகள் அணைக்க.

மனதிலிருந்த அழுத்தம் பறந்தோட
பிடரியின் இறுக்கம் பின்னிறங்க
முகத்திலும் பல மின்னல் அடிக்க
முழு உறவாளரும் வந்து என்னைக் காண

கொண்டு போனதைக் கொடுக்க கொடுக்க
தந்ததை பெற்றவர் களிக்க
வண்டு போல இதயம் குறு குறுக்க
வயதும் முப்பது குறைவு போலிருக்க

சைக்கிளை மிதித்து பறக்க
சாய்ந்த மரத்தில் மோத
சைக்கிளும் நானும் தண்ணியில் மிதக்க
ஐயோ என நான் அலற

கனவெனக் கண்டேன் கண்விழிக்க
கலங்கி நின்றேன் தாய்மண் பார்க்க
இப்படித் தானே பலரின் வாழ்க்கை
எண்ணித் தவித்தேன் நினைக்க நினைக்க!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்