சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஶ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-39
04-06-2024

பெண்ணே

பெண்ணே விடுகதையா நீ??
தாய்மைக்கு கிடைத்த வரமா நீ??
புன்சிரிப்பு கொண்டவளே…
புன்னகையெனும் முகமூடி போலியென
உன் நகை குறுநகை புரிவது தெரிகிறதா??

குடும்பம் தழைக்க உரமிடுபவளே
குத்துவிளக்காய் ஒளி தருபவளே
மெழுகுவர்த்தியாய் உருகுபவளே
பொன்னைப் போல தரம் உயருபவளே
பூவைப் போல மென்மையானவளே

வலிகள் என்பது வளப்படுத்தவல்லவா
கனவு கண்டு, முயன்று நீ
முன்னேறிடு பெண்ணே
தினம் தினம் சில நிமிடம்
உனக்காய் ஒதுக்கிடு கண்ணே!

வரும் தடையனைத்தும்
படி தாண்டிப் பறந்திடும் பெண்ணே
முயற்சியை மூச்சாய் சுவாசித்து
உனை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு பெண்ணே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.