சந்தம் சிந்தும் கவிதை

ஜமுனாமலர் இந்திரகுமார்

தீ

சிக்கி முக்கி கற்களின்உரசலில்
தீயாய் வந்தது
தீயதை எரித்து
தூயது காணும்
போகிப் பண்டிகை ஆனது
பழையன கழித்து
புதியன புகுத்தி
தை மகள் வருவாள்
செம்மண் அடுப்பொடு
செந்தணல் வீசி
பொங்கி மகிழ்வாள்

சீதையின் சீற்றம்
தூயதாய் ஏற்றது செந்தணல்
கண்ணகி சீற்றம்
மதுரையை எரித்ததும் அத்தணல்
எரிந்த மதுரை
புகழினைப் பெற்றதும் நற்றணல்

நெற்றிக் கண்ணில் தீப்பொறி பறந்தது
பறந்த பொறிகளோ
குழந்தைகள் ஆனது
ஆக்கலும் அழித்தலும்
அக்கினிக்கு உண்டு
வாழ்வியல் போலவே
அக்கினி கொள்ளுது

ஜமுனாமலர் இந்திரகுமார்