பச்சைக் குவளை
கதிரவன் ஒளியால் பச்சையம் பெறுவாள்
மழையின் துளியால்
துளித்துச் சிரிப்பாள்
பனியின் பொழிவில்
பூத்துச் சிரிப்பாள்
குளிரின் கொடுமையில்
மரத்து நிற்பாள்
இலை உதிர்காலம்
பழுத்தே விழுவாள்
கள்ளை ஏந்த
பிளாவாய் மடிவாள்
பந்தியில் குந்த
தலை விரிப்பாள்
பீப்பி ஊத
குழாய்ச் சுருள்வாள்
கோவில் விழாவில்
தொங்கி நிற்பாள்
இட்டலிச் சட்டியில்
வட்டமாய் இருப்பாள்
வீட்டு வேலியை
பின்னலால் மறைப்பாள்
பொங்கல் பானையின்
கழுத்தில் இருப்பாள்
பூரண கும்பத்தில்
மங்களமாய் இதழ் விரிப்பாள்
ஜமுனாமலர் இந்திரகுமார்