சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்

*1-நிச்சயதார்த்தம்
இரு மனங்கள் ஒன்று
சேர்ந்து திருமணம் எனும் இல்லறம் நல்லறமோடு கரும்பாய்
இனித்துக் காலமெலாம்
கண் கலங்காது வாழையடி வாழையாகத் தழைத்தோங்க முதன் முதலில் கூடும் விழாக் கோலம்

மணமகன் மணமகள் இரு வீட்டு சம்பந்தியரும்
அளவளாவி இருவர்
எண்ணமதினைத் தெரிந்து கலந்து
உரையாடிடும் நிழலான
சம்பந்தம் நிஜமாகிடும்
நிச்சயதார்த்தம்
தமிழர் கலாச்சாரமதில்
என்றுந் தொடரும் இவ்
விழாவானது பழங்கள்,
பூக்கள், பலகாரத்
தாம்பூலங்கள்
பரிமாறப்பட்டு புரிந்துணர்வோடு
முடிவானதென்று
தீர்மானம் ஆயிடினும்
சீதனம்,நகை, ரொக்கம்
எனப் பேசிக் குழப்பி
அடித்து பெண்ணின்
பெற்றோரைக் கண்ணீரில் மூழ்கடிப்பதும் இந்த
நிச்சயதார்த்தமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
—/——///————///
2-நிச்சயதார்த்தம்

தொட௫ம் துணை வாழ்வு
தி௫மணப் போர்வையின் நிகழ்வு
பகிந்துணர்வின் ஊடு௫வின் திறவு
செப்போடு சீ௫ம் ம௫தாணியும்
மணமகள் வீட்டில் மணமகனின்
௨றவும் கூடிவ௫ம்

வெண்திரை மூடி அழகுதேவதையாய்
மணவறை மடிஏந்தி மகளி௫ப்பாய்
மாப்பிள்ளையின் பெண் ௨றவுகள்
கைபடிய ம௫தாணி வண்ணம் அழகிட்டு
அடையாளம் என்னும் பெயர்சொல்லி
அணிந்திடுவர் கை கழுத்தில் ஆபரணம்

நான் ஏற்ற மார்க்கத்தில்
நிச்சயதார்த்தம் என்று ஒன்றில்லை
ஈர்வீடும் சம்மதித்தால் ௨றுதிப்படுத்தல்
அடையா ம௫தாணி விழா நிகழ்வு

பொன்னோடு பொ௫ளும் பெட்டிகட்டி
மணமகன் பள்ளிவாசலில் தொழுகையிட்டு
வீட்டோடு அவர் இ௫க்க பெண்கள் கூட்டம்
குரவை வெடியோடு மணமள் வீடுவ௫வர்

வளர்பிறை நாள்பார்த்து
மகிழ் ஓசை த௫ம் கூட்டம்
ஓயாது வி௫ந்தோம்பல் நாட்டம்
௨ற்றா௫ம் பெற்றோ௫ம் மகிழ
வேரூன்றி தளைத்த வி௫ட்சம்
வேறோ௫ரிடத்தில் நாட்டிவைக்க
நடக்கும் விழா இறையாசியோடு
-வஜிதாமுகமட்-ண
——-/—/———
3-
நிச்சயதார்த்தம்
இருவீட்டாரின் சம்பந்தம்
இருபக்கமும் இணைவாய்
இல்லமே இன்பமாய்
இருந்திடும் மகிழ்வு

ஒற்றை வரிசையில்
தட்டுக்கள் பரிமாற்றம்
ஓதுவார் மும்மொழிய
ஒளிருமே சிறப்பு

ஆண்பெண் சம்பந்த உறுதிப்பாடு
அவனியில் கலாச்சார பண்பாடு
நாள் நட்சத்திரம் பார்த்து
நடக்குமே நல்லதொரு நிகழ்வே
-செல்வி நித்தியானந்தன்-
——-/——————-