சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்

அலை ஓசை

ஆடி அசைந்தாடும் அலையோசை
ஆனந்தமாகும்
கூடி ஆர்ப்பரிக்கும்
கடலோசை
சுனாமியாகும்
அடிப்படை ஆதாரம்
ஆத்மார்த்த
வாழ்வாகும்
வெளிப்படை ஓசைகள்
வீரிய
இசையாகும்

ஓசைகள் பலவகை
ஒன்றித்த
இசையாகும்
ஒற்றுமை இணைத்தால்
ஓங்கார
அலைஓசையாகும்

செல்வி நித்தியானந்தன்