வலைப்பூ
உருளும் உலகின்
தொழில் நுட்ப
வலைப்பூ
உல்லாச சல்லாபம்
ஆடிடும் வலைப்பூ
இளையசமுதாயம்
இருக்கி அணைப்பூ
இல்லாது இருப்பதாய்
இருட்அடிப்பு
களவு பொய் கனவுலகு
கட்டிப் போட்டு ஆடுது
கட்டுப் பாடு இன்றியே
வலைப்பூவை நாடுது
சிலந்திப் பின்னலாய்
சீரிய வலையில்
சிக்கிய தலைமுறை
சீக்கிரம் விடுபடவே
சிந்தித்து செயல்படவே
செல்வி நித்தியானந்த ன்