சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்

முள்ளிவாய்க்கால்
முள்ளி வாய்க்கால் நினைவின் வடு
முடிவின் நாளும் பதிவின் ஏடு
மூர்க்கத் தனமாய் போட்ட குண்டு
தீர்க்கத் தினமாய் எரியும் இன்றும்

இளமை முதுமை பச்சிளம் குழந்தை
இதுவரை பலருக்கு புரியாத விந்தை
இலங்கை இந்தியா கூட்டு முயற்ச்சி
இரகசிய இணைவாய் மறைமுக பயிற்ச்சி

ஈழப்போரில் இறுதியில் உயிர்கள் இழப்பு
ஈடுகொடுத்து பலியான அப்பாவிகள் இறப்பு
ஈரேழு ஆண்டும் சடுதியாய் போகுதே
ஈற்றில் தேடும் உறவுகளும் வலியாகுதே

குண்டுச் சத்தமும் அழகுரல் ஓசையும்
குவிந்து கிடந்த மனித உடல்களும்
குழிதோண்டி புதைக்க யாருமற்ற நிலையிலே
குருதி படிந்த நாளாய் இன்னமும்.