வியாழன் கவிதை

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம்04
மகள்
அழகின் குரலாய்
ஒலிக்கும் அழகே
அந்திவான நிலவே
ஆடி அசையும் பதுமையே
இதயம் கவரும்
இன்னிசை மழையே
கவிதை ஊற்றான
கள்ளச்சிரிப்பே
தேனாய் தித்திக்கும்
தேவாமிர்தமே
தெவிட்டா அழகின்
எட்டாக் கனியே
துள்ளி குதிக்கும்
புள்ளி மானே
துயிலும் போதும் சிரித்த முகமே
கன்ன சிவப்பில்
காண்போர் மயங்க
வழியெங்கும் உவமை தேடி
வழியின்றி தவிக்கின்றேன்
உன் அழகை கவி எழுத
சுமித்ரா தேவி
இலங்கை (கொழும்பு)