வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 19-01-2023
ஆக்கம் – 43
பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது

கருவறையில் கருக்கொண்டு
கருவினிலே உருக்கொண்டு
பெற்றவள் பெற்றிடும் வலிமையில்
எட்டி உதைத்தே உலகை
எட்டிப்பார்க்கும்
வலியோடு அன்னையும்
வலிமையில் குழந்தையும்

கருவறையில் தொடங்கி
கருவிழி மூடும்வரை
போராட்ட வாழ்க்கையில்
தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
மிகவலிமை பெற்றிடல் வேண்டும்

மானிடம் மாண்புடன் வாழ்வதற்கு
பெண்களை போற்றிடல் வேண்டும்
பெருகிடும் வலிமை பெற்றுயர்ந்து
ஆணுக்கு பெண் சரிநிகர் சமநிலை எய்தல்வேண்டும்

நூற்றாண்டுகள் கடந்தும்
வல்லாதிக்க கோடூர ஆட்சிகளின்
அடக்கு முறைகுள் வாழும் மக்களின்
உடல்வலிமையும் உளவலிமையும்
உயர்ந்திடல் வேண்டும்
உரிமைகள் யாவும் பெற்று
உலகை வென்றிடல் வேண்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
15-01-2023