சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 169
பட்டினி

பட்டினியால் அடிவயிறு பற்றி எரியுது
அக்கினியை கக்கியபடி விண்கலம் பறக்குது
சந்திரனில் கால்பதித்து சரித்திரம் படைக்குது
ஓருவாய் சோற்றுக்கு மக்கள் அலைகின்றபோது
செவ்வாயில் வாழ்வதற்கு ஆராச்சி நடக்குது
பட்டினிக்கு தீர்வின்றி விஞ்ஞானம் வளருது
பார்எங்கும் பசியாலே மக்களின் உயிர் பறிபோகுது
பாரா முகமாக உலகமும் பார்த்துக்கொண்டிருக்குது

வயிறு கொழுத்தவர்களுக்கு என்நாளும் விருந்து
ஏழையின் வயிற்றுக்கு மருந்துக்கூட உணவில்லை
எட்டையபுரத்தான் எழுப்பிய குரல் எட்டவில்லை எவர் காதிற்க்கும்
ஏழைகள் எழுப்பிய குரலும் கடவுளின் காதிலும் விழவில்லை
ஆலயமணியின் ஓசையில் ஆண்டவனும் தூங்கியதால்

உண்டியல்கள் நிறம்பி வழியுது
உணவின்றி வயிறுகள் ஓட்டிக்கிடக்குது
உணவை குப்பையில் கொட்டுவது பாவம்
உணர்வு உள்வர்களே ஓருகணம் சிந்தியிங்கள்
உள்ளத்தில் ஈரம் உள்ளவர்களே உதவிட முன்வாருங்கள்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
01-04-2022