சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 165

திமிர்

முன்தோன்றிய மூத்தமொழி தமிழுக்கும் திமிருண்டு
ஓர் எழுத்தும் பொருள் சொல்லும்
ஈர் எழுத்தும் மந்திரம் ஆகும்

வள்ளுவனும் இயற்றி வைத்தான்
ஈரடிக்குள் இல்லறத்தின் நல்லறத்தை
ஞாலத்தில் சிறந்த ஞானச் செருக்கனவன்

திமிர் கொண்ட காளை பாய்ந்துவரும்
திடங்கொண்ட காளையவன் அடக்கிடுவான்
வீர விளையாட்டின் தமிழ் வீரணவன்

ஓரு சொல் வெல்லும் ஓரு சொல் கொல்லும்
ஆணவத் திமிர் ஆயுழைக் குறைக்கும்
தன்மானத் திமிர் தலை நிமிரச் செய்யும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
03-03-2022