வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 03-03-2022
ஆக்கம் – 34
விடியலின் உன்னதம்

மாலை மயக்கத்தில் ஆழக்கடலினில்
வீழ்ந்துவிட்ட ஆதவன் நீலக்கடல் நீந்தி
எழுகதிர் வீசில் உயிர்த்தெழுவான்
பல்உயிர்கள் யாவற்கும் மறுபிறப்பாகும்
பயிரினங்கள் யாவிற்க்கும் புத்துணர்வாகும்
இயற்கையின் விடியல் உன்னதமாகும்

எல்லோர்க்கும் எப்பொழுதும்
விடியலின் உன்னதம் கிடைப்பதில்லை
ஆதிக்க வெறியர்களின் ஆட்சிகளின் கீழ்
ஆதிக்குடிகள் நீதி வேண்டி அலைகின்றார்கள்
காலம் காலமாய் காத்துக்கிடக்கின்றார்கள்
நாளை விடியுமென்ற நம்பிக்கையில்

உன்னதமான விடியலைத்தேடி
உக்கிரேன் மக்கள் தவிக்கின்றார்கள்
சன்னதம் கொண்டு நிற்கின்றது உலகம்
ரஸ்யாவை தடுத்து நிறுத்தாமல்
இரவும் பகலும் இடியோசை
எங்கும் ஓலிக்கின்றது
மக்களின் அழுகுரல் ஓசை

போரிடும் உலகம் வேருடன்
சாய்ந்திடல் வேண்டும்
மனிதம் இங்கே புனிதமாக வேண்டும்
மாண்புடன் வாழும் நிலைபெற வேண்டும்
புதிய விடியல் உன்னதமாக வேண்டும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
01-03-2022