வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 24-02-2022
ஆக்கம் – 33
பருவகால மாற்றம்

பனி மலைகள் உருகுகின்றது
பருவகாலத்தின் மாற்றமது
கடல் மட்டம் உயர்கின்றது
நிலங்கள் பறிபோகின்றது
காடுகளை அழித்த பாவமது

சகாரா பாலைவனத்திலும்
பனிமழை பொழிந்தது -நாளை
எரிமலை வெடிக்கும் போதும்
பனிமழை பூ மழை தூவும்
பருவகால மாற்றம் தலைகீழ் மாற்றம்

வழிவழி வந்த நம்முன்னோர்கள்
மெஞ்ஞானம் தன்னைஅகழ்விக்கும்
நல்லறிவு கொண்டு
வீசும் காற்றையும் நான்கு
வகையாய் பிரித்தார்கள்
கச்சான் சோழன் தென்றல் கொண்டலென்று
அழகான பெயர் சூட்டி அழைத்தார்கள்
பருவத்தே பயிர் செய்ய கற்றும்தந்தார்கள்

தூசி மயானமானது சூழல்
வெப்பமயமானது பூமி
இந்த நூற்றான்டின் விஞ்ஞானம் தந்த பரிசு
விண்ணைத் தொட்டது விஞ்ஞானம் சாதனை
மண்ணை மலடாக்கி தரிசாக்கிப்போட்டது வேதனை

உலகை மாசு படுத்திய மாகான்களின்
உருப்படாத உச்சி மகாநாட்டுகள்
குளிரூட்டிய மண்டபத்தில்
மந்திரஆலோசனைகள்
காலத்தையும் நேரத்தையும்
வீணாக்கும் வீணர்களின் செயலாகும்

நாளுக்கு நாள் நாட்டிற்க்கு நாடு
நாலுமரம் நட்டிருந்தால்
நாலுபாகை வெப்பம் குறைந்திருக்கும்
நாலுகுளங்களிலும் தண்ணீர் நிறைந்திருக்கும்

உன் வாழ்க்கையில்
ஓரு மரம் நட்டால் நீ மனிதன்
பல மரம் நட்டால் நீ மாமனிதன்
மரங்களை வளர்ப்போம் மண்வளம் காப்போம்
மனிதம் போற்றும் மாண்புடன் வாழ்வோம்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்

லண்டன்