சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 163
மனமே சாந்தி அடைவாய்

மனமே மனமே உறங்கா மனமே
தினமும் தினமும் வருந்தும் மனமே
காலம் காலம் கனவு காணும்
இதுவும் இதுவும் கடந்து போகும்

ஆழ்மனக் கடலின் அலைகள் ஓயும்
என்மனக் கோயில் அமைதி காணும்
உயிரும் மெய்யும் ஓன்று சேரும்
துன்பம் நீங்கி இன்பம் பெருகும்

இலையும் உதிரும் துளிர்த்து வளரும்
மனதில் கூட துணிவும் பிறக்கும்
உறவும் மிளிரும் உணர்வும் சேரும்
உலகம் முழுவதும் என் வசமாகும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்