வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 17-02-2022
ஆக்கம் – 32
உருமாறும் புதிய கோலங்கள்

சுற்றும் உலகத்தையே
தலைசுற்ற வைக்கின்றது
உருமாறி உருமாறி உருக்கொள்ளும்
கொரொணோவின் புதிய கோலங்கள்
குடுகுடுப்பைக்காரனாய் கூவும் [WHO]
கூவிகின்றது நல்லகாலம் பிறக்குதென்று

காலநிலைமாற்றத்தின் புதிய கோலங்கள்
உலகமெங்கும் இயற்க்கையின் சீற்றங்கள்
வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியே போகின்றது
பாலைவனத்திலும் பனிமழை பொழிகின்றது
பனிப்பாறைகளும் உருகியே கரைகின்றது

முட்டையிலிருந்து கோழிவந்ததா
கோழியிலிருந்து முட்டைவந்ததா
இன்றுவரை விடையில்லை-ஆனால்
நெகிழி [PLASTIC] முட்டையும்
களவாச் சந்தையில் விற்பனைக்கு
குப்பையில் உணவை கொட்டிய பாவம்
நெகிழி [PLASTIC] அரிசியும் விற்பனையாகுது
ஏமாற்று உலகத்தின் கோலங்கள்

உக்ரைனில் உக்கிர போர்க்கோலங்கள்
வல்லாதிக்க ரஷ்யா தன் வல்லமையைக் காட்ட
கூடவே கூடாத சீனாவும்
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றது
எல்லாமே ஆதிக்க வெறியர்களின்
அகங்காரக் கோலங்கள்

நாலாம் உலகயுத்தம் நடக்குமா
நாடிஜோதிடரையும் காணவில்லை
ஆரூடம் சொல்லும் ஜோதிடரையும் தேடுகின்றோம்
கொரொணோவில் தொலைந்து போனவர்கள்
மதில் மேல் பூனையாய் பதுங்கும் கோலங்கள்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
13-01-2022