வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 20-01-2022
ஆக்கம் – 30

கொண்டாட்டக் கோலங்கள்

கொண்டாட்டக் கோலங்கள்
எம் சந்திகளின் வழிவழி வந்த
பண்பாட்டு விழாக் கோலங்கள்
ஓன்றாய் கூடும் உறவுகளின்
மனமகிழ்வின் சங்கமங்கள்

கோலம் போட்டு விழாக்கோலம்
எட்டுப்போட்டு வட்டமும் போட்டு
எண்ணத்தில் உள்ளதை கைவண்ணத்தில்
வண்ணமாய் கோலமாவில் போடும் கோலம்
ஈக்கும் எறும்புக்கும் உணவாகப் போகும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என உணர்ந்து
கோலத்துக்குள்ளும் ஞாலத்தை வைத்தான்
பல்லுயிர்களை நேசிக்கும் மாண்புமிக்க தமிழன்

புத்தாண்டின் விழாக்கோலம்
விண்ணைப் பிளக்கும்
மத்தாப்புக் கோலம்
தைப்பொங்கல் திருவிழாக்கோலம்
விண்ணை தொடும் பட்டங்களின்
வண்ணக் கோலம்

ஓட்டிய வயிறுடன்
அண்ணாந்து பார்க்கும் மக்கள்
பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் ஓருபுறம்
பகட்டுக் கொண்டாட்டகங்கள் மறுபறம்
அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரக்கொண்டாட்டங்கள்
மனித குலத்தின் அலங்கோலங்கள்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்