வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 06-01-2022
ஆக்கம் – 28
மாற்றத்தின் திறவுகோல்

தலைகீழ் மாற்றத்திற்காய்
தவம் கிடக்கின்றது பிரபஞ்சம்
மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்
விடைகாண முடியாத சூட்சுமத்திற்குள்
உலகம் சுற்றிச் சுழல்கின்றது

கொரொணாவின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில்
ஆட்டம் காண்கின்றது உலகம்
விதியா இல்லை சதியா
கேள்விகள் ஆயிரம்
பதில்களோ சூனியம்

பல்லுயிர்கள் வாழும் இவ்வுலகில்
மனிதன் மட்டுமே பேராசை கொண்டான்
வழங்களை விழுங்கும் பேயானான்
சுயத்தை இழந்து வாழ்கின்றான்
வழத்தை இழந்து தவிக்கின்றது பூமி

பொறுமையின் வளிம்பில் பூமித்தாய்
இயற்கையின் கையில் மாற்றத்தின் திறவுகோல்
மாற்றத்தின் கதவுகள் திறக்கின்ற காலம் வரும்
மனிதகுலம் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ளும் நேரம் வரும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்