சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 215
விடியல்

எங்கள் ஈழதேசம் அழகின் அழகு
விடிகாலைப் பொழுது அழகோ அழகோ
கடற்கரையோரம் கண்விழிக்கும் நேரம்
கதிரவன் கதிர்கள் கண்னிற்கு விருந்து
உடல் நலம் காக்கும் அருமருந்து
உலகிற்கு இயற்கை தந்த வரமாகும்

கோயில் மணியோசை காதோரம்
வண்டுகள் இசைத்திடும் ரீங்காரம்
பூக்களும் மலர்ந்து புன்னகை செய்யும்
புல்வெளி எங்கும் பனித்துளி மின்னும்
வயல்வெளி எங்கும் நெற்கதிர்கள் தலைசாய்க்கும்
மனமெங்கும் ஏகாந்தம் நிறைந்திருக்கும்

தினம் தினம் புதுவிடியல்
ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள்
ஆழ்மனதில் தீராத ஏக்கங்கள்
விடியவில்லையே எங்கள் தேசம்
விடிந்தும் விடியாத பொழுதுகளாய்
நாட்கள் நகர்கின்றன
நாளை விடியுமென்ற நம்பிக்கையில்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்