சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

*வாரம் 200*

*”வாருங்கள் வாழ்த்திடுவோம்”*

நாட்டுக்கு நல்லது செய்வோரை நாம் வாழ்த்திடவேண்டும்
தாய்மொழியாம் தமிழ் வளர்க்கும் அதிபர் நடாமோகனையும் வாழ்த்திடுவோம்.
இலண்டன் மகாநகரிலிருந்து உலகெங்கும் தமிழ் பரப்புகின்றார்

பாமுகம் கவிதை அரங்கம் இன்று இருநூறு வாரங்கள் கால்பதிக்கின்றது

சந்தம் சிந்தும் சந்திப்பு தொகுத்து வழங்கும் பாவை அண்ணா!
தமிழார்வம் மிக்க ஒரு பிறவிக்கலைஞர்! ஆய்வாளர்,தொகுப்பாளர்.
நல்ல தமிழ்க்கவிதைகள் உருவாக ஊக்கமளிக்கும் வழிகாட்டி
*”தொகுப்பாளர் திலகம்”* என நாமஞ்சூட்டி ரசிகப்பெருமக்கள் வாழ்த்துகின்றனர்.

எத்தலைப்பாயினும் எடுத்துத்தொகுத்து கவிதையாக்கும் ஆற்றல் பெற்றவர்
நம் கலைஞர். கவிதை ஆக்கத்திறமை வளர்த்த பாமுகப்பூக்கள் வாழ்க
என வாழ்த்துகின்றோம்.
ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் பல்லாயிரம் ரசிக நெஞ்சங்களுக்கு எம்மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
பாமுகப்பூக்கள் இன்றுபோல் என்றும் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டு உயர்ந்தோங்க வேண்டுமென தமிழன்னை சார்பில் வாழ்த்துகின்றோம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.