சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 259 ]
“ஊக்கம்”

முயற்சி இன்றேல் உயற்சியில்லை அதனால்
ஊக்கமது கைவிடேல் என்றாள் ஔவை
ஊக்கமுடையோர் அனைத்தும் உடையார்
தோல்விகள் வந்தாலும் துவண்டுவிடாதோர்

அன்றுசெய்யவேண்டியவற்றை அன்றேமுடிப்பார்
காலமறிந்து கடமைகளாற்றி சோம்பலொழிப்பார்
காலம் பொன்னானது சென்றபொழுதோ திரும்பிவராது
விடாமுயற்சியால் வறுமைபோக்கிசெல்வமுஞ்சேர்க்கலாம்

ஊக்கமும் முயற்சியும் தோல்வியை வெற்றிப்படிகளாக்கும்
சும்மா கிடைக்குமா சுகம்? துணிவான விடாமுயற்சியே சொர்க்கம்
ஊக்கம் குன்றாது கொள்கைக்காய் உயிரீந்தவருண்டு
உரிமைக்காய் போராடி இனத்தை மீட்டவருண்டு

எம்மவரும் மண்ணுக்காய் போராடி மாவீரரானதுண்டு
ஒருகொடியின் கீழ் ஒன்றிணையாத வீரத்தால் பயனேதுமுண்டா?
கேலிக்கூத்தாய் ஐந்தாம்படையாய் மாறியதேன்?
இயல்பூக்கங்களில் அண்டிக்கெடுத்தல் குருதியில் கலந்துவிட்டதா?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்