சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 257 ]
“பெண்மையை போற்றுவோம்”

வேண்டியதெல்லாம் ஈந்தெமைக்காக்கும் பூமகளே!
காக்க கலைகளளித்து கவலைகள் தீர்க்கும் கலைமகளே!
பெண்மையின் பெருமையைப்போற்றி மகிழும் தமிழவளே!
ஈன்றபொழுதிருந்து தெய்வமாய் போற்றும் அன்னையவளே!

அம்மாஎன்றே தாயைநாடும் சேயினொலிபெண்மையின்முதல்மொழி
பிறந்தநாடேஎல்லோர்க்கும் தாய்நாடு,பேசும் மொழியேதாய்மொழி
பெண்ணாகிய தாயே உன்வாழ்வின் வழிகாட்டி
வாழ்வின்உயர்விற்குத் தாயே என்றுமுன் திசைகாட்டி

தாயாய் தாரமாய் துணையாய் என்றும் அவள் ஆட்சி
மாதராய் பிறந்திடவே மாதவஞ்செய்திடல் வேண்டும்
மாதரரை இழிவுசெய்யும் மடமைதனை ஒழித்திடவேண்டும்
வன்புணர்வு செய்வோரை கணத்திலே கழுவேற்றவேண்டும்

“பெண்மையெனும் தாய்மை மேலோங்கஆவனசெய்து அகமகிழவேண்டும்”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.