சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 252 ]
“காதலர்”

கருத்தொருமித்த காதலரை மகிழ்விக்கும் காதலர்தினம்
மாசித்திங்கள் பதினான்காம் நாளை உலகமே காதலிக்கும் .
மானிடக்காதல்ப்பருவம் கல்யாணவைபோகம்காணுதல் அருவம்
அறியாதவருடன் திருமணம்செய்து புரியாத கடமைக்கான வாழ்வு.

பள்ளியில் படிக்கும் இளஞ்சிட்டுக்களிரண்டு
இருவருக்குமிடையில் இறுக்கமான தொரு இணைப்பு
காதலைகூறாமல் மூடிமறைத்ததால்
பள்ளிப்படிப்பும் படலையோடு போச்சு!

பொருத்தமான சோடி பல வாழ்வில் வந்துபோகும்
மனதில்வந்தகாதலை வெளிப்படுத்த வெட்கம் தடுக்கும்
அரிதான சந்தர்ப்பம் கதவைத்தட்டாமலே சன்னியாசம் கொள்ளும்
இறுதியில் துறவுதான் தன்விதியென இறைவனைச்சாடும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்