சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 247 ]
“சிரிப்பு”

மனிதகுலமேன்மைக்கொரு மகத்தான வரம்
மற்றுயிர்களுக்கில்லாத சிரிப்பெனுந் திறன்
மகிழ்வோடு உளம் நிறைய தன்னால் சிரிப்புவரும்
மனம் விட்டுச்சிரியுங்கள் நோய்விட்டுப்போகும்

சிரித்து வாழ வேண்டுமென உலகம் போற்றும்
பிறர் சிரிக்க வாழ்தல் தாழ்வெனத்தூற்றும்
உண்மைச்சிரிப்பில் சிரிப்பவன் உள்ளம் புரியும்
சாகசச்சிரிப்பானால் எதிரியின் கபடந்தெரியும்

உள்ளன்போடு சிரிப்பவர் வாழ்க்கையில் உயர்வடைவர்
ஆணவத்தோடு சிரிப்பவர் ஈற்றில் அழிவடைவர்
சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர் சாதனை படைப்பர்
சிரிப்பால் உயர்ந்த கலைஞர் என்றும் மனதில் நிலைப்பர்
அன்னையின் புன்னகை ஆயுள்வரை நிலைக்கும்
காதல் மனையாளின் மாறாமுறுவல் இல்லற ஒளியேற்றும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.