சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 238

“மீண்டெழு”

விழுந்தாலும் மீண்டெழுந்து போராடும் உறுதியான கொள்கை
எழுந்து போராடி வெற்றிகாணும் இலட்சியவாழ்க்கை
தோன்றி மறையும் ஓயாதகடல் அலைகளின்தன்மை
மீண்டெழுந்து போராடி வெற்றிபெறும் நம்பிக்கை

ஆண்டாண்டு காலம் நாம்கண்ட துயர்படிந்த பெண்ணடிமை
விண்டுடமுடியா அவலமதில் வீறுகொண்டெழுந்த பெண்மை
எண்ணில்லாத்துறைகள் இன்று பெண்ணில்லாத்துறை ஏதுமில்லை
மண்ணிலின்று போராடி மீண்டெழுந்த மென்மையான பெண்மையின் பெருமை
விழும்போது தூக்குபவர் எல்லாம் எழும்போது தாங்கவருவதில்லை
முழுமையான இனவாதங்கண்டும் உதவும் கரங்கள் முழுமனதோடு நீளுவதில்லை
இறப்பதற்கு உயிரின்றி வேறொன்று இல்லாத மக்களின் அவலநிலை
இணைந்துபோராடி மீண்டெழ இனவாதச்சட்டங்களும் இடமளிப்பதில்லை
குமுறும் எரிமலையும் பொறுமையிழந்து ஒருநாள் வெடித்துச்சிதறுவது போல
மக்கள் புரட்சியும் ஒருநாள் வெடித்தே தீரும்
அடிமைவிலங்கும் உடையும் சுதந்திர ஒளி தெரியும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.