சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 235 ]
“வலைப் பூ”

பாய்ந்து பின்னும் சிலந்தி,உலகு மெச்சும் வலைப்பூ
அறிவூட்டும் வலையின் சீரான ஒழுங்கமைப்பு
உணவும் உறைவிடமும் முழுவாழ்க்கையில் அடங்குதல் சிறப்பு
வாயில்லாப்பிராணிகள் காட்டிய வளர்ச்சியில் வித்தாகும் வலைப்பூ

எலியின் வளையைப்பார்,மண்ணின் கீழ் மறைந்து வாழ்தல் மலைப்பு
எதிரிகள் கண்படாமல் வாழ்விடமமைத்தல் சிறப்பு
எதிர்கால தேவைக்கு களஞ்சியமமைத்து சேகரிப்பு
ஆபத்தில் எதிரியறியாமல் வெளியேற இரகசிய வாசல் மறைப்பு

விலங்குகளின் விஞ்ஞான, தொழில்நுட்ப, தொடர்பாடல் வலைப்பு
மின்சார உற்பத்தியோ வியப்பு, தேசமெங்கும் அதிசய வலைப்பூ
அறிவும் தொழில் நுட்ப வலைப்பூக்களின்
கையிருப்பு
இன்றைய மனிதருக்கு தானாகவே தோற்றுவிக்கும் இறுமாப்பு.

நன்றி வணக்கம்

சிவா சிவதர்சன்.