சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 234 ]
“தலைப்பூ”

கார் குழல் அழகு பெண்மையின் சிறப்பு
மேலும் அழகூட்டும் அவள் சூடும் தலைப்பூ
பூவை விரும்பா பூவையரும் பூவுலகில் உண்டா?
தமிழ்ப்பெண்ணாய் இனங்காட்டுதும் அவள் சூடிய தலைப்பூ

மஞ்ள் பூசி நீராடி தலைப்பூவும் சூடி உலாவரும்
கன்னியின் அழகில் லட்சுமி கடாட்சம் ஒளி வீசும்
தலைவாரி பூச்சூடி பெண்ணைப்பள்ளிக்கு அனுப்பியபோது
பாரதியே கண்டு மகிழ்ந்து பாடல் புனைந்தது உண்டு

தலைவிரி கோலமாய் திரியும் பெண்களின் அலட்சியம்
கைவிரி கோலத்தை ஒருநாள் வழங்குதல் நிட்சயம்
பூவோடும் பொட்டோடும் வாழ விரும்பும் பெண்ணின் இலட்சியம்
சுமங்கலியாய் வாழ வைத்தது அவள் செய்த முற்பிறவிப்புண்ணியம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்