சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 169 “பட்டினி”

தத்துவம் கூறிநிற்கும், “அவனின்றி அணுவும் அசையாது”
சக்தி தரும் உணவின்றி உடலும் இயங்காது.
எரிபொருள் இல்லையெனில் எந்திரமும் ஓடாது.
உழைக்கும் உடலை என்றும் பட்டினிபோடுதல் கூடாது.

உணவூக்கம் உயிர்களுக்குரிய இயல்பூக்கம்
கையில் உணவில்லாத போதும் பசி என்று வயிறு கேட்கும்
கிடைக்கும் கண்ணலாம், நம்பிக்கையூட்டும் மனது சொல்லும்.
போராடிக்களைத்து இறுதியில் பட்டினிச்சாவு தழுவும்.

உணவுற்பத்தியோ சனத்தொகைப் பெருக்கத்தின் சிறு விகிதம் ஆக
பற்றாக் குறையே பட்டினியின் வெளிப்பாடு, பாடுபட்டுப் பயிர் செய்க
இல்லார்க்கு இருப்பவர் ஈதல் பெருந்தவம் எனக் கொள்க
பட்டினியால் பலர்பரிதவிக்க, பார்த்திருந்தும் பகிர்ந்துண்ணாப் பதரே மடிக!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.