சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 168 ” என் அண்ணா ”

அன்பும் அறிவும் நிறை களஞ்சியம் நீயண்ணா
ஆற்றல் பல கொண்டவன் நீ, ஆறுதல் தரும் அட்சயபாத்திரம்
இயற்கையாய் இனியவன்
இங்கிதம் அறிந்தவன்
ஈதலில் வள்ளல் அன்னை ஈன்ற புதல்வரில் முதல்வன்
உயர் குணங்களில் குன்றேறி நிற்பவன் உறவுகள் பேணும் வல்லவன்
ஊறிவழியும் பண்பின் ஊற்று என்றும் வற்றாதவன்
எமனுக்கும் அஞ்சாதவன் எதுவரினும் எதிர்கொள்பவன்
ஏற்பது இகழ்வு என உழைத்து வாழ உறுதிகொண்டவன்
ஐயம் திரிபறக்கற்றவன் ஜயமிட்டு உண்பவன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கோள்கை பொருந்தியவன்
ஓங்கியுயர்ந்த ஆகிருதி ஓயாமல் உழைக்கும் திறன் உடையவன்
ஔவியம் பேசாதவன் நொந்தவர்க்கோ ஔடதமாய் திகழ்பவன்
ஃதும் ஐயமின்றி அண்ணா உன் மலரடிக்கே சமர்ப்பணம்
அண்ணா நீ நீடூழி வாழவேண்டும் வளங்கள் மேலும் பெறவேண்டும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.