[ வாரம் 167 ]
“பணி”
தன்னுயிர்போல் மன்னுயிரிடமும் காட்டும் கருணை
பொதுப்பணியில் நிறைவுகாணும் உள்ளத்தகமை
என்கடன் பணிசெய்து கிடப்பதே எனும் இலட்சியம்
தன் பணியில் என்றும் குன்றா உற்சாகம்
ஆவி பொருள் தன்னலம் தனை தியாகம் செய்யும் வைராக்கியம்
பொதுநல சேவையில் பெறும் முழு இன்பம்
பொய்மையில்லாச் செயற்பாட்டில் இணைந்த இதயம்
யாவுமுயர் பணியினால் சான்றோர் அடையும் பூரணம்
சமயகுரவர்பெற்ற பேறு இறைபணியினால் வந்ததன்றோ ?
பொதுப்பணிக்கே அர்ப்பணித்த அன்னை தெரேசா
மருத்துவமாது புளோரன்ஸ் நைற்றிங்கேல் தாதியர் திலகம்
சைவமும் தமிழும் இருகண்ணென போற்றிய நாவலர்
எத்தனை சான்றோர் எத்தனை துணைகள் எத்தனை பணிகள்
இன்றும் போற்றும் அவர் நாமம் எளிதே சாற்றுதல் அரிதாம்
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.