சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 165 “திமிர்”

கல்வியால் உயிர்த்தோர்க்கு தாம் கற்றவர் எனும் திமிர்
பணம் படைத்தோர்க்கோ ஏற்படும் பணத்திமிர்
உயர்பதவி வகிப்பவர்க்கு தாமாகவே வரும் அதிகாரத்திமிர்
தன்னாலும் முடியும் எனக்காட்ட விழையும் ஆசையின் வெளிப்பாடு திமிர்

அடக்குதலும் அடங்குதலும் உடையோர் ஆன்றோர்
அடக்கமுடையோர் அமரராவார் மாற்றார் என்றும் மதிப்பார்
தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா.
தன்னினத்தின் பெருமைதனை உரத்துக்கூவி உலகிற்குசொன்ன புலவன்

ஒடுக்கு முறைக்கு எதிரகப்போராட அறைகூவல் விடுத்தவன்
எண்ணிய கருமத்தை எவ்வாறேனும் நிறைவேற்றத்துடித்தவன்
அஞ்சுவதற்கு அஞ்சுவான் பொதுநலன்பேண அஞ்சான்
பொதுநலனிற்காய் திமிர்கொண்டு உழைத்தவன் இன்று வரலாற்றில் வாழ்பவன்-பாரதி எனும் மகா கவிஞன்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.