சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 172 ]
“தமிழீழம்”

தாய் மண்ணே! தமிழ் திருநாடே!
வடக்கும் கிழக்கும் இணைந் த கனவுத்தாயகமே!
கையில் கிடைத்ததுபோல் வந்தாய்.
கானல் நீராய் ஏமாற்றி மறைந்தாய்.
அகிலமேங்கும் வாழும் தமிழரின்று அகதியானார்.
தமக்கும் ஒரு நாடுண்டு, சொல்லமுடியாது அலைகின்றார்.
எல்லைகளற்ற சாம்ராஜ்யம் தமிழர் அன்று படைத்தார்.
இன்றோ இறமையுள்ள ஒரு குளி நிலமின்றி உள்ளார்.

பழம் பெருமை பேசியே உள்ளம் பொருமுகின்றார்.
வீரமிருந்தும் விவேகம் இருந்தும் திட்டமின்றி வீழ்ந்தார்.
கடல்போல் பரந்த அரபுநாடு,கையளவு நிலங்கொண்ட யூத நாடு
அடக்கி ஆளுதல் கண்டு வியக்கும் உலக வரலாறு.

இத்தனையும் கண்டும் பம்மிப் பதுங்குகின்றார்
தமிழீழக் கனவோடு ஆயிரமாயிரம் மாவீரர் மண்ணில் விதையானார்.
என்று தணியும் உந்தன் தமிழீழத் தாகம்.
அடிமை மோகம் அறவே மடியும் நாள் என்றோ?
அன்று விடியும் சுதந்திரத் தமிழீழம்!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.