சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

“பரவசம்”

இளம் பருவ வாழ்வின் இன்ப நினைவுகள்
இதயம் நிறைந்து பொங்கும் நிலையில் பரவசம்
சீருடை தரித்து சிட்டுக்களாய் பறந்து திரிந்தகாலம்
பள்ளியில் படித்த போது பெற்றார் ஆசிரியர் மெச்சிய பரவசம்.

எண்ணிய கருமம் எளிதில் முடிந்திட மனம் நிறைய பொங்கும் பரவசம்
பருவங்கள் வந்து போக பரீட்சையும் வரும்,சித்தியடைந்த போது சிந்தையில் பரவசம்
எந்தையும் தாயும் எமை ஏத்தி வளர்க்கையில் பொறுப்புகளற்ற பொன்னான காலம்.
வாழ்க்கையில் ஒருமுறை வந்துபோகும் வசந்தம் போலவே வந்துபோனதே இணையிலா இளமைப்பருவம்

அன்றுபோல் இன்று ஏன் இன்பமாய் இல்லையே
பிறந்த மண்ணும் பழகிய உறவும் உண்மை அன்பும் என்றும் இன்பம்
காலங்கள் கடந்தும் கல்லில் எழுத்தாய் என்றும் நிலைக்கும்
பரவசம் தரும் பாலிய இன்பங்கள் என்றும் அழிவதில்லை.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.