சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

*பாமுகப்பூக்கள்*

தைப்பொங்கல் கொண்டாடி முடிந்த கையோடு
*பாமுகப்பூக்கள்* நூல் வெளியீட்டுக் கொண்டாட்டம்.
வயிற்றுக்கும் இன்பம் செவிக்கும் இன்பம்
இரண்டுமே தமிழால் யான்பெற்ற இன்பம்

*பாமுகப்பூக்கள்* வெளியீடு கவிபடைத்த கவிஞரின் பொன்னாள்
வலி சுமந்து பிரசவித்த ஆக்கங்கள் நூலுருவில் வெளிவரும் நன்னாள்
பாவையண்ணா பாடுபட்டு அரங்கேற்றும் திருநாள்
கல்மேல் எழுத்தாய் நிலைத்து நிற்கும் பாமுகப்பூக்களின் பிறந்தநாள்
புதுக்கவிதை ஆட்சி செய்யும் தமிழ்மொழியின் வளர்ச்சி வரலாறு
மரபு வழிக்கவிதை மாட்சி குன்றவில்லை, வாழ்கிறது புகழோடு
யாவரையும் அணைத்தே செல்லும் பாமுகம் கொள்கை சிறிதும் பிறழாது
வாழ்வியல் போற்றும் வள்ளுவம் பாதையில் பாமுகப்பூக்களும் முன்னேறும்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.