சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 202

“நினைவு நாள்”

பயன் கருதாதொருவர் செய்யுமுதவி என்றும் நன்றிக்குரியது
தாயகமீட்புப்பணியில் அர்ப்பணித்த மாவீரர் புகழ்போற்றுதற்குரியது
கார்த்திகை இருபத்தேழு மாவீரர் நினைவுநாள்
கொண்டாடி வழிபடும் தமிழரின் பூர்வ புண்ணிய நாள்

மாவீரர் கடமை தவறாதவர் கொண்ட லச்சியமே குறியானவர்
களத்திலிறங்கிவிட்டால் வெற்றி அல்லது வீரமரணம் இரண்டுமே ஒன்றெனக்கொண்டவர்
மண்ணில் வித்தாய் விழுந்தாலும் மீண்டும் முளைவிடுபவர்
கல்லறையில் துயின்றாலும் தமிழர் வாழ்வில் விளக்கேற்றியவர்

மாவீரர் திலகங்களே!
போராடிப் பயிற்சிபெற எந்த இராணுக் கல்லூரிக்கும் சென்றதில்லை
மன ஒருமைப்பட தவமியற்ற கானகம் ஏதும் செல்லவில்லை
பெற்றதாயினும் மேலாய் தமிழன்னையை மதித்தீர் உளமார
உங்கள் லட்சியம் தமிழீழ தாயகம்
பிறமுதுகு காட்டாத மறவர் கூட்டம் ஒன்றாய் திரளும்
மாவீரர் திருநாளில் உங்கள் கனவு நிச்சயம் நனவாகும்

மாவீரர் தாகம் தமிழீழத்தாயகம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.