சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 222. ]
“பெற்றோரே”

பெற்றோரே! பெற்றோரே! பெருமை வாய்ந்த பெற்றோரே!
பெற்றதை சிறப்பாய் சீராக வளர்ப்பீரே!
அதிகாரமின்றி அடக்குமுறையின்றி பிள்ளையை நேயமுடன் வளர்ப்பீரே !
மனதில் தோன்றும் எண்ணங்களை சுதந்திரமாய் வெளியிடும் உரிமையை கொடுப்பீரே !
ஐந்தறிவுப்பூனையும் ஒடுக்குமுறைக்குச் சீறிப்பாயும்என்பதை அறியீரோ ?

அடக்குமுறை, எதிர்ப்பலைகள் பாசத்தை வேரறுக்கும் விதிவலைகள்
காலத்துக்கு ஏற்றவாறு நீங்களும் மாறித்தான் ஆகவேண்டும் பெற்றோரே !
அன்னையர்தினம் தந்தையர்தினம் சித்திராப்பௌர்ணமி ஆடி அமாவாசையில் கொண்டாடும் எம்மவரே பெற்றவர்தினம் கொண்டாட ஏன் மறந்தீர் பெற்றோரே !
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என உரைத்த ஔவைப்பாட்டியும் பெற்றவரில் இருவரும் அடக்கம் என்பதால் சொல்லாமல் விட்டாரோ ?

கண்ணெதிரே உலாவிய தெய்வங்கள், விரும்பிய தெல்லாம் தந்த இறைவிம்பங்கள் நீங்களன்றோ பெற்றோரே !
தங்கள் பிள்ளைக்காய் தங்கள் வசதிகளைத்துறந்து தியாகவாழ்வு வாழ்ந்தவர் நீங்களன்றோ பெற்றோரே !
தங்கள் வசதிகள் குன்றாது முதியோர் இல்லம் அனாதை ஆச்சிரமம் என அலையவிட்டார் உம்மை பெற்றோரே !

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பொய்யாமொழிப்புலவர் கூறிச்சென்றாரே!
கவலை வேண்டாம் பெற்றோரே அவர்களும் ஒருநாள் உங்களிடத்தில் வருவாரே!
இந்தச்சாபமே மனதைவருத்துகிறதா பெற்றோரே !

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.