சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 213

“நாதம்”

இயற்கை வெளிப்படுத்தும் ஓசைகள் ஆயிரம்
ஓசைகள் எழுப்பும் கோலமே நாதம்
ஒலிக்கோலங்கள் ஒழுங்கமைக்கப்பட்டதே சங்கீதம்
நாகரீகமும் வளர இசையின் வளர்ச்சியும் பெற்றது உச்சம்

இசையில் மயங்காத உயிர்கள் உலகில் ஏது?
இன்னிசையில் இறைவனே லயிக்கும்போது ஜீவராசிகளில் தவறேது?
குழலோசை கேட்டு ஆயர்பாடி ஆநிரைகள் குடம்குடமாய் பல்சுரந்தபோதும்
அன்னையரின் தாலாட்டில் தன்பசிமறந்து குழந்தைகள் தூங்கும் போதும்
செவி வழிநுகரும் நாதம் வாய்வழி நுகரும் ஊணின் இனிது வள்ளுவன் அன்று கூறியது என்றும் தவறன்று
பொழுதுபோக்காய் கலைகள் பல சிருஷ்டித்த மனிதன்
இசைக்குத் தனியிடமும் வேறுபல கலைகளுடன் இணைந்தும் பயன்படுத்தி இன்புற்றவன்

மொழி வளர்ச்சியே நாகரீக வளர்ச்சியின் சாதனை
இயல் இசை நாடகம் என முத்தமிழ் வளர்த்த தமிழன்
தமிழின் நாதம் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச்செய்தவன்
பிறமதங்கள் சைவத்தை ஊடறுக்க முயன்றும் போராடி
நாதன் நாமம் நமச்சிவாயவே எனும் சைவநாதம் பதித்தவன்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.