சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 271 ]
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 271 : “நடிப்பு”

தன்னகத்தே கொண்ட தாழ்மையை மறைக்கும் நடிப்பு
பிறரிடம் காணும் திறன்களை பிரதிபலிக்கும் நடிப்பு
நடிப்பெனப்படுவது சிலரிடமே உள்ளதனிச்சிறப்பு
உலகமே ஒரு நாடகமேடை, நடிக்காத மாந்தருமுண்டோ கூறு!

நடிப்பால் உயர்ந்தவர் சிலரே உலகிலின்று
மக்களும் அவரைப்போற்றுகின்றார் நெஞ்சில் வைத்து!
இலட்சியத்தோடு வாழ்ந்த நடிகர்களும் நம்மிலுண்டு
நல்லதையே போதித்தவரும் அவர்களிலுண்டு

வயிற்றுக்காக வாழ்நாள் முழுவதும் நடிப்பவருண்டு
இனம்காணுந்திறனோ இன்று மக்களிடம் நிறையவுண்டு
ஏமாற்ற முடியாத மக்கள் கூட்டம் இன்று அதிகமுண்டு
ஏமாற்ற ஆளில்லையேல் நடிப்புக்கேது இடமுண்டு?

ஆயிரம் வளர்ந்த நாடுகள் இன்று உலகிலுண்டு
ஆனாலும் லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடுதல்கண்டு
அறிவுடை மக்கள் நெஞ்சம் கலங்குவதுண்டு
ஆட்சியாளர் நடிப்பா? மக்கள்உதாசீனமா?

வேண்டாமே இந்தப்பொல்லாத நடிப்பு!
என்று திருந்தும் இப்பொல்லாத உலகம்?
என்று ஒழியும் ஆட்சியின் அராஜகம்?
மக்கள்போராட்டத்தாலே ஒழியும் ஏமாற்று நடிப்பு!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.