சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 209

“நிச்சயதார்த்தம்”

உயிர்களின் தோற்றம் எதற்காக? இனப்பெருக்கமே நோக்கம் அதற்காக!
திருமணச்சடங்குகள் இடையில் புகுந்தது எதற்காக? சமூகத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர்வதற்காக!
சட்டம் தோன்றியும் சமூகக்கண்காணிப்பு மிகுந்தும் அசுரத்தனம் ஒழியவில்லையே முற்றாக.
நிச்சயதார்த்தம் விவாகத்தில் இடம்பெற்றதும் குடும்ப சமூக வளர்ச்சியின் மைல்கல்லாக!

அன்று உறவுகள் கலந்து பேசி முடிவெடுக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் இன்று தரகர்களின் முன்னின்று நடாத்தும் திருமணவியாபாரம்
தரகரை நம்பாத பெற்றவர்கள் தாமே முனைந்து உடகங்களில் விளம்பரம்
வெளியே சொல்ல மறுக்கும் குடும்ப இரகசியங்கள் தன்னால் வெளிவரும் அம்பலம்
நிச்சயதார்த்தம் ஆனவர்கள் தம்பதிகள் ஆவது நிச்சயம்
உறவுகள் நன்னோக்கோடு இணைத்து வைத்த புண்ணியம்
விளம்பரம் செய்து வியாபாரமாக்கியோரிடம் எங்ஙனமாகும் அபிமானம்?
தலைமுறைக்கு நல்வழி காட்டும் சமூகவாழ்வின் வளர்ச்சியில் இடம்பெறும் நிச்சயதார்த்தம்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.