சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_147

“குருதிப்புனல்”
முள்ளிவாய்ககாலில் நடந்த மும்முனைப் போரில்
செங்குருதி சிந்தி வெண்குருதியில் நனைந்தது
எம் இனம்!

நம் மொழிகாத்த
நம் இனம் காத்த
எம் மண்காத்த காவல் தெய்வங்கள்
இன்னும் இன்னும்
சிறைகளில்
வாடி சொல்லென்னா துன்பங்களை அனுபவிக்கின்றார்கள்!

தாய்யை இழந்த குழந்தை
தந்தையை பறி கொடுத்த மகள்
தமயனை காணாமல் பரிதவிக்கும்
தம்பி
தாரத்தை தாய்நிலத்திற்கு தானம் செய்த துணைவி!

கொட்டி தீர்க்க ஓன்றா இரண்டா
கொட்டிய மழையில் நனைந்து
எறித்த வெயிலில் காய்ந்து
எறி கணைக்கு இலக்காகி!

அங்கங்களை இழந்து
குண்டு மழையில் நனைந்து
குருதிப்புனல் சிந்தி
குனிக் குறுகிய
எம் இனமே
எம் சனமே!

இறந்த தாயவளின்
பாலை பருகிய பாலகன்
பார்த்து அழுதோமே
முள்ளியில்
யாருக்கு சொல்லி அழுவம் யாரும் கண்டு கொள்ளவில்லை எம்மை!

இன்னும் எத்தனை எத்தனை
பெண்போராளிகளின் வன்கொடுமை நாம் அழுத கண்ணீரும்
நம் குஞ்சுகள் அழுத கண்ணீரும்
வாய்க்கால் நிரம்பி
வழிப்போக்கர் கால்கழுவி
இஞ்சிக்கி பாஞ்சு
எலும்பிச்சைவேர் ஊன்றியது
இத்தனையும்
அத்தனையும்
நம் இனம் மீது பற்றின்
பரிதவிப்பு!!

நன்றி
வணக்கம்
11.05.24