சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_152

“வசந்தம்”
பாலை வனத்தை
சோலை வனமாக்கி
வசந்தத்தின்
வனப்பு
வானத்தின் ஒளிப்பு!

பச்சை பசீரென
புல்தரைகள் புல்வெளிகள்
மரம் செடி கொடிகளின்
அழகோவியம்!

முற்றத்து ரோஜா
பூத்து குலுங்குது
முதுகில் முட்டுது
முள்ளு குத்துது!

கொடியாய்
படர்ந்து
பாக்க பாக்க
கண்ணை பறிக்கிது
கண் ஜாடை
காட்டுது!

புளினி இனம் பாட
குருவிகள் ஓசை ஒலிக்க
வண்டுகள்
தேனிகள்
தேனிசை ராகங்கள் இசைக்க!

வசந்தம் வந்ததுவே
மகிழ்ச்சியும்
தந்நதுவே!

பூசை பொருட்கள்
வாழை அறுகு
வாசலில் நின்று வசந்தத்தை
வரவேற்கிது!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24