சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_143
“ஊக்கம்”
ஊக்கம் உடமையே
ஒருவனது நிலையான செல்வம்
மற்றைய செல்வமே
நீங்கி போய்விடும்
ஊக்கம் எம்மை விட்டு விலகலாகாது!

முயற்சி உடையவள்
வளர்ச்சியை தடுக்க முடியாது
புதைத்தாலும் மரமாக
முளைத்து எழுந்து நிற்பாள்!

ஊக்கம் இருப்பின்
உரிய நேரத்தில்
இலக்கை நோக்க முடியும்!

சோம்பலை நீக்கி
ஊக்கத்துடன் செயல்பட்டால் தேர்விலும்
தேர்ச்சி பெற்று தேறலாம்!
நன்றி
வணக்கம்