சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_142

“மாறுமோ மோகம்”

வெளிநாட்டு மோகம்
வந்த பின் தாகம்
பட்டு திரியும் துன்பம்
படும் அவலம்
வேலை தேடும் அவலம் வேதனையில் மக்கள்!

அரசாங்க ஊழியராக இலங்கையில் இருந்தினம்
இலங்கையில் வாழ முடியாதாம்
திருமணம் செய்ய பெண்ணும் கொடுக்கினம் இல்லையாம்
காரணம் என்னவென்று கேட்டால்
வெளிநாட்டு மாப்பிள்ளையை தான் பொட்டையள் கட்டுவாளவையாம்
ஒன்றும் செய்ய முடியாமல் பொடியள் எல்லாம் கிளம்பி கொண்டு இருக்குதுகள் வெளிநாட்டு
மோகத்தில்!

பன்னிரண்டு
மணிநேர வேலையாம்
சம்பளமும்
போதாதாம்
முதலாளிமார் போட்டு முறிக்கினமாம் ஏன் இஞ்ச வந்தம் என்று இப்ப தான் நினைக்கினம் சொன்னால் கேட்க மாட்டினம் உவையள்
பட்டால் தான் புரியும்
தொட்டால் தான் தெரியும்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்