சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_140

“வேலி அடைப்போம்
வீட்டின் அறிக்கை வேலி
காணியின் எல்லை கதிகால் வேலி
நாட்டின் எல்லை பாதுகாப்பு அரன்
கண்டத்தின் எல்லை
கடலின் தொல்லை

கிழுவவேலி நெருசலாய்
நேத்தியாய் நிழல்தரும்

பூவரசு வேலி
பூத்து கொலுங்க
காத்திருந்து
அம்மம்மா குழல் ஊதி
ஊர் கூடி விழையாடி மகிழ்ந்திருந்த காலமது!

தென்னோலை வேலி
பனைமட்டை வேலி
பதம் பாக்கும் கறையான்!

தகரவேலி
தடை தாண்டி
ஆடும் ஓடமுடியாது
மிருகங்கள்
அன்னிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவலை தடுக்க தடுப்பு வேலி!

யானை போன்ற பெரிய மிருகங்களை தடைசெய்ய
மின்பாச்சப்படும் வேலி!

பச்சை மரம் செடிகொடிகளால் அடைக்கப்படும் வேலி
குளிர்ச்சியின் குதுகலம்!

மதில் வேலி
மனிதன் முகத்தையும்
அகத்தையும்
பார்க்க முடியாமல் கட்டுபோடும்
தடுப்பு சுவர்!

நன்றி
வணக்கம்