சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_136

“காதலர்”

காதலுக்கு கண் இல்லை
கற்காதவனுக்கு பெண் இல்லை
கற்காதவன் கற்றவளை
காதல் வலை வீசினால்
கல்யாணத்துக்கு தடை மேல் தடை!

கல்வி கற்றது பாதி
கற்காத பாதியில்
காதல் வலையில் விழ்ந்து
விபரம் தெரியாமல்
விபத்தில் சிக்கி
வாழ்க்கையை தொலைத்தவர்கள் பாதி!

காதலர்
காதலர்களாய் வாழ்ந்து
காதல் நிறைவேறி
பெற்றவர்கள்
சம்மதத்துடன் திருமணம் செய்து
நினைத்தபடி
நினைத்த இலக்கை அடைந்து வாழும் காதலர் பலர்

பார்ரெங்கும்
பரவசமாய் வாழ்வது மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி!

நன்றி
வணக்கம்