சந்த கவி வாரம் _131
நிலாவில் உலா
தேய்பிறையில் தேய்ந்து
வளர் நதியாய் வளர்ந்து
வானத்து தாரகையாய்
வான்பரப்பில் நிக்கும்
நிலவே !
உன் ஒளி இன்றேல் நாமேது
உன் ஒளிக்கு
இடாய் கண்டது ஏது
பாருக்கு பட்டொளி கொடுக்கும் மதியே!
இரவில் அரன்மனை கட்டி
காக்கும் காவலனுக்கு
ஒரு நாள் விடுமுறை
அமாவாசை
ஒரு நாள் ஒளிமுகமாய்
பௌணமி!
நித்தம் பௌணமி
நிலவு போல்
பாத்திருக்க ஆசை
உன்னருகில்
நானிருக்க பக்கம் வந்தால்
சுட்டெரித்து விடுவாய் பால் நிலவே!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்