சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
91
தை மகளே

அவணியில் வயல் உழுது
ஐப்பசியில் நெல் விதைத்து
கார்த்திகை மார்களியில்
நெல் வயலை பராமரித்து
வரம்பு உயர
நீர் உயர வேண்டும் என்று வரம் வரமாய் வேண்டி நின்று
நெல் வயல் உயர மனம் மகிழ்ந்து

இலகு காத்த கிளி போல
மூன்று மாதங்கள் காத்திருந்து
தை மாதம் அறுவடையாம்
ஆரவாரமாய் காத்திருந்து
புது நெல்லில் புதிரெடுத்து
அறுவடை செய்தே களஞ்சிய படுத்திய
நெல்மணிகள் நம் கண்மணிகளை சந்தை படுத்தி
உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நம் விவசாயி வாய் இனிக்க பாடுகின்றான்
தை பிறந்தால் வழிபிறக்கும்
வசதி பிறக்கும்

தை திங்கள் வந்ததே
தரணி மெல் மகிழ்ந்ததே
ஆதவனார் வந்தாரடி
பொங்கல் இட்டு
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்
தை மகளே தரணியில் நீதான் உயர்ந்தவளே

நன்றி
வணக்கம்