சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்தம் சிந்தும் கவி வாரம் _127
“பிறந்த மனை”

கடலும் கடல் சார்ந்த நிலம்
வயலும் வயல் சார்ந்த நிலம்
காடும் காடுசார்ந்த நிலமும்
தென்னம் தோப்புக்குள்
தென்றல் காற்றுக்குள்

இதமான வீடு
இனிமை சேர்க்கும்
பரம்பரை இல்லம்
பாரம்பரியம்
பார்க்க அழகு
அப்பம்மா வீடு

கூடி வாழ்ந்த மனை
குதுகலமனை ராசிகண்ட மனை
சுவர்களில் அழகு வர்ணங்களில் அழகு கோலம் இட்டிடுவாள்
அன்னை

உளைத்து தந்த
உழவு இயந்திரத்திற்கு
ஓலையில் ஓர் மண்டபம்
ஒரு நாளும் தூங்காது

முற்றத்தில் இரண்டு வேப்பமரம்
அப்பா ஆசை ஆசையாக வளத்தவர்
ஆமிக்காரன் இருந்த போது தங்கள் தேவையை பூர்த்தி செய்திட்டினம்

நெற்களச்சியபடுத்தும் கொம்பறை…
வளவுக்குள் காவல் தெய்வம்
ஐயனார் வழிபாடு வளம் பெற்றது
கண்ணகை அம்மன் பொங்கலுக்கு வீட்டு வாசலில் தண்ணீர் பந்தல் இன்னும் தொடர்கிறது

அப்பாவின்
உறவுகளுடன் நாம் வாழ்ந்த காலம்
அருமை மிக்க காலம்

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்